Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 14 டிசம்பர் (ஹி.ச)
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வடஇந்தியாவில் கடும் குளிர் நிலவும். அந்த வகையில் கடந்த சில நாள்களாக பல்வேறு வடமாநிலங்களைக் கடும் பனிப்பொழிவு வாட்டி வருகிறது.
இந்தப் பனிப்பொழிவும் குளிர் அலையும் மேலும் சில நாள்கள் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.இந்தப் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர்.
அரியானாவின் ரிவாரி மாவட்டத்திற்கும் சஜ்ஜர் மாவட்டத்திற்கும் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிச 14) காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
காலை கடுமையான பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மையால் சாலையில் சென்ற பேருந்துகள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
நான்கு பேருந்துகள்,கார்கள் என அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் பலர்
படு காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b