அன்புமணியை சந்தித்த ஜி.கே.மணி....! அரசியலில் பரபரப்பு!
சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.) சென்னை திருவான்மியூரில் பாமக மூத்த நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. மூர்த்தியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்‌. இந்நிலையில், பா
ஜி கே மணி


சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை திருவான்மியூரில் பாமக மூத்த நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. மூர்த்தியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்‌.

இந்நிலையில், பாமக கௌரவத் தலைவரும் ராமதாஸ் ஆதரவாளருமான ஜி‌.கே.மணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கிருந்து அவர் புறப்படும் போது அன்புமணியை நேருக்கு நேர் சந்திக்கும் நெருக்கடியான நிலைக்கு ஆளானார்.

இருவரும் ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசாத நிலையில் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

இச்சம்பவம் பாமகவினர் மத்தியில் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam