Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 டிசம்பர் (ஹி.ச.)
இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று (டிச 14) பெரும்பிடுகு முத்திரையர் நினைவு சிறப்பு தபால் தலை வெளியிடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தபால் தலையை வெளியிட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது,
இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் நாம் எல்லோருக்கும் எடுத்துரைக்க வேண்டிய நிகழ்ச்சி. தமிழக மக்கள் தெய்வீகத்தை கொண்டாடக்கூடிய மக்கள். மோடி அரசு, தமிழகத்துக்கு நன்மை செய்யவும், தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடவும் பல்வேறு பணிகளை செய்கிறது. இந்த முயற்சிகளைப் பற்றி நாம் தமிழக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்று கூறினார்.
நயினார் நாகேந்திரன் பேசுகையில், பெரும்பிடுகு முத்தரையரை வணங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு, ரூ.16 லட்சத்து 83 ஆயிரம் கோடிக்கு மேல் நிறைய நிதி வழங்கி பல்வேறு நன்மைகளை செய்துள்ளார். தமிழ் தேசியத்தை போற்றி மகிழ்ந்தவர்.
இத்தகைய உதவிகளை செய்யும் பிரதமர் மோடிக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முத்தரையர் பற்றி நாலடியாரில் 295வது பாடலில் பாடி இருக்கிறார்கள்.
முத்தரையருக்கு தபால் தலை வெளியிடுவதில் உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b