டிச.23 ஆம் தேதிக்கு ஓ. பி.எஸ். ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு... குழுவை கழகமாக மாற்றி அறிக்கை..
தமிழ்நாடு, 14 டிசம்பர் (ஹி.ச.) பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் திங்கட்கிழமை நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓ பன்னீ
ஓ பன்னீர்செல்வம்


தமிழ்நாடு, 14 டிசம்பர் (ஹி.ச.)

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் திங்கட்கிழமை நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.

அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சிகளை மேற்கொண்ட அவர், அது கை கூடாததால் டிசம்பர் 15ஆம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமித்ஷாவை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் டிசம்பர் 15ஆம் தேதி நடக்கவிருந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒத்திவைத்து டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.

அதிமுக உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் கையெழுத்தின்றி தலைமை கழகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் டிசம்பர் 23ஆம் தேதி சென்னை வேப்பேரியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam