Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)
பாமக கட்சி சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் தமிழகம், புதுவையில் போட்டியிட விரும்புபவர்கள் 14ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி சென்னை பனையூரில் விருப்ப மனு விநியோகத்தை அன்புமணி ராமதாஸ் (டிச 14) தொடங்கி வைத்தார்.
தமிழகம் மட்டுமல்லாது புதுவையில் 30 தொகுதிகள் என மொத்தம் 264 தொகுதிகளில் பா.ம.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி தரப்பு பா.ம.கவினர் விருப்ப மனு விநியோக பணியை இன்று தொடங்கியுள்ளனர்.
இன்று காலை 11 முதல் வரும் 20ஆம் தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட இருப்பதாகவும், 20ஆம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்று பா.ம.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியிட விரும்புவோர் பொது தொகுதிக்கு ரூ.10,000ம், தனித் தொகுதிக்கு ரூ.5,000ம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி செய்வதாக தேர்தல் ஆணையம், தமிழக டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
ராமதாஸ் தனது புகாரில் கூறியிருப்பதாவது:
விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி செய்கிறார். விருப்ப மனு அளிக்க பாமக நிறுவனராகிய எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது.
பாமக பெயரையோ கட்சியையோ பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b