வரும் புதன்கிழமை பாமக கூட்டம் - ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாடு, 14 டிசம்பர் (ஹி.ச.) பாமக மாநில நிர்வாக குழு கூட்டம் 17ஆம் மேரி நடைபெற உள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் 17.12.2025 ப
ராமதாஸ்


தமிழ்நாடு, 14 டிசம்பர் (ஹி.ச.)

பாமக மாநில நிர்வாக குழு கூட்டம் 17ஆம் மேரி நடைபெற உள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் 17.12.2025 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கியமான கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும். என்று கூறியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam