நிலப்பிரச்சனையில் சிஎஸ்ஆர் போடுவதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளர் கைது
புதுக்கோட்டை, 14 டிசம்பர் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள பன்னிரெண்டாம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமணி. விவசாயியான இவர் தனது நிலத்தில் கல்லுக்கால் ஊன்றும்போது, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் கல்லை பிடுங்கி எறிந்து பிரச்சனை செய்
SI Shankar


புதுக்கோட்டை, 14 டிசம்பர் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள பன்னிரெண்டாம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமணி. விவசாயியான இவர் தனது நிலத்தில் கல்லுக்கால் ஊன்றும்போது, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் கல்லை பிடுங்கி எறிந்து பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 19-ஆம் தேதி ஆதனக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கரிடம் வீரமணி புகார் அளித்தார்.

புகாரை பெற்ற உதவி ஆய்வாளர் சங்கர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார். ஆனால், புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வீரமணி மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்ஐ சங்கரிடம் புகார் மனுவுக்கான ரசீதை (சிஎஸ்ஆர் - CSR) வழங்குமாறு கேட்டுள்ளார். இதற்கு எஸ்ஐ சங்கர், ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால், சிஎஸ்ஆர் போடுவாத கூறினாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமண, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று உதவி காவல் ஆய்வாளர் சங்கர் மீது புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூ.10,000 ரொக்கத்தை வீரமணியிடம் கொடுத்து அனுப்பினர். அதன்படி, வீரமணி ரசாயனம் தடவிய பணத்தை உதவி காவல் ஆய்வாளர் சங்கரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் - களவுமாக சங்கரை கைது செய்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உதவி ஆய்வாளர் சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நிலப்பிரச்சனையில் சிஎஸ்ஆர் போடுவதற்கு கூட விவசாயிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN