Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச)
கேரளாவில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ள காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எப். கூட்டணிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எஸ்தலத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுக் கொண்டு வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ள காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எப். கூட்டணிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும், எனது தனிப்பட்ட முறையிலும் மனப்பூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பான உள்ளாட்சித் தளத்தில், மக்கள் நலன், சமூக நீதி, மதச்சார்பற்ற தன்மை ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி யூ.டி.எப். பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றி, காங்கிரஸ் தலைமையிலான அரசியல் மீது மக்கள் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டமன்றப் பொது தேர்தலுக்கான ஒரு தெளிவான முன்னோட்டமாகவும், ஆட்சிமாற்றத்தின் உறுதியான அறிகுறியாகவும் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.
இந்த வெற்றிக்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை, யூ.டி.எப். கூட்டணி கட்சிகள், அர்ப்பணிப்புடன் உழைத்த தொண்டர்கள் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்திய கேரள மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ