Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 14 டிசம்பர் (ஹி.ச)
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு பயிரிடப்படும். இது தவிர வாழை, வெற்றிலை, பரங்கிக்காய், வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொங்கலுக்கு பல வாரங்கள் முன்பிருந்தே தெருவோரக் கடைகளில் விற்பனை நடக்கும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் வாங்கி செல்வர்.
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலுாரில் வாரச்சந்தை கூடும் நாட்களில் மட்டும் சில்லரையில் கரும்பு விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. பத்து கரும்புகள் கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.350 முதல் விற்கப்படுகிறது.
இது குறித்து சில்லரை கரும்பு வியாபாரிகள் கூறுகையில்,
தற்போது விவசாயிகளிடம் மொத்தமாக விலை பேசி தேவைக்கேற்ப வெட்டி கொண்டு வருகிறோம். சில்லரையில் முழு கரும்பு, துண்டுகள் தரத்திற்கேற்ப விலை வைத்து விற்கிறோம்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொங்கலுக்கு ஒரு சில மாதங்கள் முன்பே சில்லரை விற்பனையில் தினமும் விற்றோம்.
கரும்பு நுகர்வில் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தற்போது கிராம மக்களை நம்பி சந்தை நாட்களில் மட்டும் கடை அமைத்து விற்கிறோம் என்றனர்.
Hindusthan Samachar / vidya.b