Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)
திமுக வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பு திருவண்ணாமலையில் இன்று (டிச 14) மாலை நடைபெறவுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.30 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இது குறித்த வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மலை நகரில் மாலை சந்திப்போம்! இளம் திராவிடர்களே! பெருமைக்குத் தயாராகுங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b