Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 14 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், கரூர் சம்பவத்துக்கு பின், மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் துவங்கி உள்ளார்.
காஞ்சிபுரம், புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், வரும் 18ம் தேதி, ஈரோட்டில் பயணம் மேற்கொண்டு, பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசார பயணத்திற்கு அனுமதி கோரி ஈரோடு ஆட்சியர் கந்தசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் மனு அளித்தார்.
விஜய் பரப்புரை செய்யும் இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என விஜயபுரி அம்மன் கோயில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியர், காவல்துறையில் கடிதம் அளித்திருந்தார். இதனால் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை இடத்தை பயன்படுத்திக்கொள்ள தவெக சார்பில் கட்டணம் செலுத்தப்பட்டதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வாடகை 50 ஆயிரம் ரூபாய், டெபாசிட் 50 ஆயிரம் ரூபாய் விஜய் தரப்பில் செலுத்தப்பட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி சுஜாதா அனுமதி வழங்கியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b