Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலக்தில் அக்கட்சி நிர்வாகிகள் இன்று (டிச 14) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரில் நடைபெற்ற தவெகவின் நிகழ்ச்சி ஒன்றில் ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை பேனரில் போட்டதற்காக வட்டச் செயலாளர் பிரதீப் என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆதரவாளராக இருந்து வரும் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் இடையில் மோதல் இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.
திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் பணம் வாங்கிவிட்டு பதவிகளை விற்பனை செய்வதாக குற்றம்சாட்டியதோடு, பனையூரில் அலுவலகத்திற்கு உள்ளே தவெகவினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது பண முதலையே வெளியேறு என்று கோஷத்துடன் பனையூர் அலுவலகத்திற்கு தவெகவின் முழக்கமிட்டு கொண்டே வந்தனர்.
இதனால் தவெகவில் உட்கட்சி பூசல் திவீரமடைந்துள்ளதாக தெரிகிறது.
Hindusthan Samachar / vidya.b