இன்று முதல் வேட்பாளர் அறிமுகத்தை தொடங்கும் தமிழக வெற்றிக் கழகம்
சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.) 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகி வரக்கூடிய நிலையில், குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் தங்கள் தொகுதி வேட்பாளர் யார் என்பதை கட்சி அறிமுகம் செய்து வைக்கிறது. 2026 சட்டமன்
TVK Protest


சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகி வரக்கூடிய நிலையில், குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் தங்கள் தொகுதி வேட்பாளர் யார் என்பதை கட்சி அறிமுகம் செய்து வைக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகத்தை இன்று முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக நேர்முக தேர்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் தற்காலிக வேட்பாளர் பட்டியல் ஒன்றையும் தயாரித்து வைத்திருந்தனர்

இந்நிலையில் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு மட்டும் தொகுதி நிர்வாகிகள் மத்தியில் வேட்பாளர்களை இன்று முதல் அறிமுகம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கட்சியின் பொதுசெயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்,கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நாமக்கலில் நடைபெறும் நிகழ்சியில் இன்று சில தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ