Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 14 டிசம்பர் (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது. மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார்! என த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அணி அணியாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணை இருக்கிறார்கள். ஆகவே தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரையிலும் மக்கள் சக்தியாக எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கும், ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தியோடு வெற்றிக் கழக துணை தலைவர் விஜய் 18ஆம் தேதி என்று சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருகிறார்கள்.
தலைவர் விஜய் உரையை பொறுத்தவரையிலும் 18ஆம் தேதியன்று 11 மணியிலிருந்து 12 மணி ஒரு மணிக்குள் அந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. மேலும் மக்கள் முழுமையாக அவர் ஆதரவு அளிக்கின்ற வகையில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த நிகழ்வாக பெரும் பிரிலே விஜய மங்கலத்தில் இது நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
மக்கள் சக்தியின் ஆதரவால் தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகிப்பார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam