Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)
திருவனந்தபுரத்தில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி கேரள மாநிலம் அரசியல் மாற்றத்திற்கு தயாராகி விட்டதை காட்டுகிறது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருவனந்தபுரம் வெற்றி தமிழ்நாட்டிலும் தொடரும். கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிகமான இடங்தளில் வென்றுள்ளது.
கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது வரலாற்று வெற்றி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக கேரளத்தில் மத அடிப்படைவாதிகள், மதமாற்ற சக்திகள், இடதுசாரி பயங்கரவாதத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகளும் பெரும் அடக்குமுறைக்கும், வன்முறை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியிருப்பது கேரளத்தில் உயிர்த்தியாகம் செய்த தன்னலம் கருதா செயல்வீரர்களுக்கும், மாநில அரசின் அடக்குமுறை, மத பயங்கரவாதம், மதமாற்ற சக்திகளுக்கு எதிராக அஞ்சாமல், உறுதியுடன் நின்று போராடிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்கு காரணமான கேரள பாஜக, நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த வெற்றி கேரள மாநிலம் அரசியல் மாற்றத்திற்கு தயாராகி விட்டதை பறைசாற்றுகிறது. திருவனந்தபுரத்தில் கிடைத்த இந்த வரலாற்று வெற்றி தமிழ்நாட்டிலும் தொடரும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ