டிசம்பர் 14, 1960 -யுனெஸ்கோ நிறைவேற்றப்பட்ட நாள்!
சென்னை, 14 டிசம்பர்(ஹி.ச.) டிசம்பர் 14, 1960(இன்று),கல்வியில் பாகுபாட்டுக்கு எதிரான பன்னாட்டு ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பால் (யுனெஸ்கோ) நிறை வேற்றப்பட்ட நாள். 1948 லேயே நிறைவேற்றப்பட்டிருந்த ஐநா மனித உரிமைகள் பிரகட
History


சென்னை, 14 டிசம்பர்(ஹி.ச.)

டிசம்பர் 14, 1960(இன்று),கல்வியில் பாகுபாட்டுக்கு எதிரான பன்னாட்டு ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பால் (யுனெஸ்கோ) நிறை வேற்றப்பட்ட நாள்.

1948 லேயே நிறைவேற்றப்பட்டிருந்த ஐநா மனித உரிமைகள் பிரகடனம், கல்வியை அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக அறிவித்திருந்த நிலையில், பண்பாடு, மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் கல்வி மறுக்கப்படுவதைத் தடுக்கவும், பாகுபாடின்றி ஒரே தரத்திலான கல்வி அனைத்து மனிதர்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது பிற நிலைப்பாடுகள், பிறப்பிடம், சமூக, பொருளாதார நிலைகள், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கல்வியை மறுப்பதை மட்டுமின்றி, ஒரே மாதிரியான கல்வி வழங்காமை, பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றையும் இந்த ஒப்பந்தம் தடை செய்கிறது.

Hindusthan Samachar / Durai.J