Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 14 டிசம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர், வள்ளியூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள்(16.12.2025) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இது குறித்து திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (16.12.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கிய நகர், தெற்கு பாலபாக்கிய நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து பூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விஜயாபதி மற்றும் நாங்குநேரி AMRL துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (16.12.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார் குளம்.
நாங்குநேரி,ராஜாக்கள்மங்களம்,சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b