மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து
சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.) சென்னை மணலி அருகே 400 KV, 230 KV, 110 KV என்ற அளவில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மின் இணைப்புகள் செல்கின்றன. இந்நிலையில், இன்று (டிச 14) காலை 6 மணியளவில் துணை மின் நி
மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து


சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை மணலி அருகே 400 KV, 230 KV, 110 KV என்ற அளவில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மின் இணைப்புகள் செல்கின்றன.

இந்நிலையில், இன்று (டிச 14) காலை 6 மணியளவில் துணை மின் நிலையத்திற்கு வெளியே உள்ள 2 டிரான்ஸ்பார்மர்களில் ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து சிதறியதால் வெண்புகை வெளியேறிய அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

இது குறித்து தகவலறிந்து மணலி மற்றும் மாதவரம் தீயணைப்புத்துறையினர் சுமார் 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீப்பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர் மற்ற இணைப்புகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தின் காரணமாக அந்த பகுதியில் சுமார் 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதனால் அப்பகுதி மக்கள் அவதியுற்றனர்.

Hindusthan Samachar / vidya.b