Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 14 டிசம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஆண் ஊர்க்காவலர் காலி பணியிடத்திற்கு தேர்வு டிச. 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஆண் ஊர்க்காவலர் காலி பணியிடத்திற்கு சேவை செய்ய தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு
டிச. 27ல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது.
பங்கேற்போருக்கு நல்ல உடல் திறன் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதிற்குள் உள்ளவராகவும், எந்தவித குற்றப் பின்னணி இல்லாதவராக இருக்க வேண்டும். அரசு ஊழியராக இருந்தால் தங்கள் துறை சார்ந்த அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முன்னாள் ராணுவத்தினர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊர்காவல் படையில் வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு போலீஸ்துறை மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதற்கு பின் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வில் பங்கேற்க கல்வி சான்று, இருப்பிட சான்று, ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b