2026 சட்டமன்ற தேர்தல் - அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்
சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.) தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் அணைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கி விட்டன. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும். ஆனால் த
2026 சட்டமன்ற தேர்தல் - அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்


சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் அணைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கி விட்டன.

வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும்.

ஆனால் தற்போது டிசம்பர் மாதத்தின் மத்தியிலேயே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி விறுவிறுப்பு காட்டி வருகின்றன. ஏற்கனவே, அ.ம.மு.க.,வும் காங்கிரசும், விருப்ப மனு பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று (டிசம்பர் 15) தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, பழனிச்சாமியிடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

அதிமுக கட்சியினர் வரும் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்.

தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மனுக்களை பெறலாம்.

பூர்த்தி செய்து, 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b