Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 15 டிசம்பர் (ஹி.ச.)
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விருப்ப மனுக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று
( டிசம்பர் 15) மட்டும் நண்பகல் 12 மணி முதல் அதற்கான படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று 15.12.2025 - திங்கட் கிழமை முதல் 23.12.2025 - செவ்வாய்க் கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும்; முதல் நாளான 15.12.2025 இன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி மனுக்களை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் 12 மணி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என அதிமுத தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மாலை 5 மணி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.
Hindusthan Samachar / GOKILA arumugam