Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பொறுப்பாளர், இணை பொறுப்பாளர்களை ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலக பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ளார்.
அதன்படி தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத்ததுறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வழிகாட்டுதலின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக இந்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam