Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 டிசம்பர் (ஹி.ச.)
வெளிநாடுகளில் போலியான கம்பெனிகளைத் தொடங்கி, இந்தியாவில் சைபர் மோசடி செய்து ரூ.1000 கோடி அளவுக்கு மக்களின் பணத்தை ஏமாற்றிய கும்பலை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
இந்த வழக்கில், சீனாவைச் சேர்ந்த 4 பேர் உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபர் மோசடிகளை செய்ய 58 கம்பெனிகள் செயல்பட்டு வந்துள்ளது.
இவற்றின் மூலம், மக்களை ஏமாற்றிய ரூ.1000 வரையிலான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், வெளிநாடுகளிலிருந்து செயல்படும் சைபர் மோசடி கும்பல் பற்றி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தி சிபிஐ மிகப் பெரிய கும்பலை கண்டுபிடித்துள்ளது.
மக்களை, போலியான கடன் விண்ணப்பம், முதலீட்டு திட்டங்கள், பொன்ஸி மற்றும் பல அடுக்கு சந்தை மோசடி, பகுதி நேர வேலை, ஆன்லைக் கேமிங் என பல வகைகளில் ஏமாற்றி பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்
111 ஷெல் கம்பெனிகள் மூலம், ரூ.1,000 கோடி வரை இந்த மோசடி கும்பல் பரிமாற்றம் செய்திருப்பதாகவும், ஒரே ஒரு வங்கிக் கணக்குக்கு மட்டும் ரூ.152 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM