சென்னை - நரசப்பூர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்
சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விஜயவாடா இடையே இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நரசப்பூர் வரை நீடிக்கப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று (டிச 15) முதல்
சென்னை - நரசப்பூர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்


சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விஜயவாடா இடையே இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நரசப்பூர் வரை நீடிக்கப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று (டிச 15) முதல் இந்த ரயில் சேவை நீடிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி சென்னை - நரசப்பூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை இன்று தொடங்குகிறது. இந்த ரயில் 655 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி 55 நிமிடங்களில் கடக்கும். இது தினசரி பயணிகள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

இந்த ரயில் சென்னையில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, நரசப்பூருக்கு பிற்பகல் 2.10 மணிக்கு செல்லும்.

பிற்பகல் 2.50 மணிக்கு நரசப்பூரில் புறப்படும் வந்தே பாரத் இரவு 11.45க்கு சென்னை வந்தடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b