Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச)
சென்னை மாநகராட்சி கடந்த ஓராண்டில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை விதிமீறல்களுக்காக கடைகள், குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்ததன் மூலம் ரூபாய் 9.36 கோடி வசூலித்துள்ளது.
சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை சென்னை மாநகராட்சி கடந்த ஓராண்டாக மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாக கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு
(spot fine) -அபராதம் விதிக்கிறார்கள்.
இதற்கென தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது ..
அதன்படி தனியார் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது பயன்படுத்தப்பட்டு சுத்தம் செய்யாமல் இருந்த பிளாஸ்டிக் குப்பைகள், கடைகள் வீடுகளில் தரம் பிரிக்காத குப்பைகள், பொது இடங்களில் குப்பைகளை எரித்தல், குப்பைகளை முறையாக கையாளாத உணவகங்கள், மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாகமல் இருந்தது, சுகாதரமற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையிலான பொருட்களை தேக்கி வைத்திருந்த பள்ளி கல்லூரிகள், மால்கள், துணி கடைகள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு என 80459 நிறுவனங்கள், குடியிருப்புகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 9,36,49000 ரூபாய் அபராதத்தை கடந்த ஓராண்டி சென்னை மாநகராட்சி கண்காணிப்பு குழு வசூல் செய்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ