Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச)
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனவும் வரும் ஜனவரி 6 ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி, தமிழக பொதுத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய ஆவணங்கள் மீது, பொதுத்துறை செயலாளர் 29 மாதங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது
தேர்தல்களின் போது, ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் கட்சிகள் கூறிய நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் நீதிபதி வேதனை அடைந்துள்ளார்
அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறாமல், வழக்கில் ஆதாரங்களை சேகரித்து என்ன பயன்? என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பியது
வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி ஆவணங்களை அனுப்பியதுடன் நின்று விடாமல், அதன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நினைவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என விளக்கமளிக்க விஜிலன்ஸ் ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கும் உத்தரவிட்டுள்ளது
அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜனவரி 6 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ