ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சம்..!
சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.) தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகைப் பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பெரிய அளவில் உயராமல்
தங்கம்


சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)

தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகைப் பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பெரிய அளவில் உயராமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையானது கடந்த வெள்ளிக்கிழமை பெருமளவில் அதிகரிக்க தொடங்கியது. தங்கம் விலை சற்று குறைந்தால் நகை வாங்கி விடலாம் என நினைத்திருக்கும் சாதாரண மக்களுக்கு மீண்டும் விலை உயர்ந்து இடியை இறக்கியுள்ளது.

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.90 உயர்ந்து கிராம் ரூ.12,460க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை அடைந்து வருகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.213க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து கிலோ ரூ.2.13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலையால் சாதாரண மக்களுக்கு நகை வாங்க வேண்டும் என்பதே எட்டா கனியாக மாறி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam