Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 டிசம்பர் (ஹி.ச.)
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு உட்பட பல்வேறு விவாதங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் இன்று
(டிசம்பர் 15) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியது. அவை கூடியதும், காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது குறித்து லோக்சபா எம்பி ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, ஜே.பி.நட்டா பேசுகையில் தெரிவித்தனர்.
பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா அமைதியாக இருக்குமாறு எம்பிக்களிடம் கேட்டு கொண்டார். ஆனால் தொடர்ந்து அமளி நீடித்ததால், அவையை 12 மணி வரை ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
அதேபோல் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b