Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 15 டிசம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை திருஇந்தளூர் பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் காய்கறி வியாபாரி முருகானந்தம் (40). இவரது வீட்டின் சமையல்கட்டில் பொருத்தப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து இரவில் கேஸ் வெளியேறியுள்ளது.
இதனை கவனிக்காமல் இன்று காலை முருகானந்தத்தின் மகன் சந்தோஷ் மின்விளக்கு ஸ்விட்ச்சை ஆன் செய்தபோது லேசான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பயங்கர சத்தத்துடன் நேரிட்ட இந்த விபத்தில், அதிர்வு காரணமாக வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உடைந்து, ஜன்னல் கண்ணாடிகள் சிதறின.
இதில், முருகானந்தம், அவரது மனைவி சரஸ்வதி, மகள் சந்தியா ஆகியோர் காயமடைந்து மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN