Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)
கருப்பும் - சிவப்பும் இரண்டறக் கலந்த பெரும் இளைஞர் படை அரசியல் களத்தை அதிர வைத்த நாள் இன்று என்று அமைச்சர் கே.என்.நேரு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நம் தலைவர் முக.ஸ்டாலின் 2007 ஆம் ஆண்டு இதே நாளில் தான் நம் திமுக இளைஞர் அணியின் முதல் மாநாட்டை நடத்தி எழுச்சிமிக்க இளைஞர் படையான திராவிட கொள்கை படையை கட்டமைத்தார்
எதிலும் முதன்மையாக இருக்கும் நம் திராவிட முன்னேற்ற கழகம் தான், இந்திய அரசியல் வரலாற்றிலேயே தனக்கான இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கம் என்ற தனிப் பெருமையை நமக்கு பெற்றுத் தந்தவர் தான் நம் தலைவர்.
கழகத் தலைவர் - நம் முதலமைச்சர் மு.க
ஸ்டாலின் தலைமையில் உருவெடுத்தது, அடுத்த தலைமுறைக்கான கொள்கைப் படையை பட்டை தீட்டி, திமுகவின் இதயமாய் திமுக இளைஞரணி வழிநடத்தி வரும் நம் கழக இளைஞரணி செயலாளர் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணிகள் என்றென்றும் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ