Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை 15 டிசம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 7 புதிய பேருந்துகளை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி,
கட்சியை பலப்படுத்த இளைஞர்கள் தேவைதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது இளைஞர் அணி செயலாளர் உரிமை உண்டு.
முன் கூட்டியே விருப்பமானவை அதிமுக வாங்கி அவர்கள் கட்சியில் நிற்பதற்கு ஆள் இருக்கிறார்களா என்று அதிமுக பார்க்கிறது, கட்சியை விட்டு யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் முன்கூட்டியே விருப்பமனு வாங்குகிறார்கள்.
இதுதான் அவர்கள் விருப்பமான வாங்குவதற்கு அடிப்படை காரணம்.
யாராக இருந்தாலும் நாங்கள் அன்பாகத்தான் நடந்து கொள்வோம்.
யாரிடமும் எதிர்ப்பு வெறுப்பு காமிக்கிற கட்சி நாங்கள் கிடையாது. எல்லோரையும் தோழமையோடு அரவணைக்கின்றவர்கள் தான் நாங்கள். கொள்கை மாறுபாடு தானே தவிர வேறு எந்த விதத்திலும் யாரையுமே நாங்கள் தொந்தரவு செய்பவர்கள் அல்ல.
திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொண்டால் யாருடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம்.
உதயநிதி ஸ்டாலின் இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையில் அனைவரும் இருக்கிறார்கள். உதய நிதியை தலைமையாக ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் கிடையாது. தலைவர் அடுத்து இளம் தலைவர் உதயநிதி.
ஏற்கனவே சேலத்தில் 15 லட்சம் இளைஞர்களை ஒன்று திரட்டி இளைஞரணி மாநாட்டை நடத்தினோம். இளைஞர்கள் திமுகவில் தான் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் சேலத்தில் நடத்தப்பட்ட மாநாடு என்பதை யாரும் மறந்து விட முடியாது. மண்டலம் வாரியாக ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே இளைஞரணி மாநாடுகள் நடத்தப்பட்டது. அதன் படி திருவண்ணாமலை யில் ஒன்ற லட்சம் இளைஞர்கள் மட்டுமே கலந்து கொண்ட நாடு.
அமித்ஷா மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமை படையெடுத்து தான் வர வேண்டும். தங்கள் கட்சியுடைய டெபாசிட்டையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வரத்தான் வேண்டும்.
ஆனால் எந்த பணமும் அவர்கள் கொண்டு வர மாட்டார்கள். நம்ம பணம் நமக்கு நம்ம பணத்தையும் அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள் மற்ற மாநிலத்திற்கு அவர்கள் செலவு செய்கிறார்கள். நம்ம பணத்தை மற்ற மாநிலங்களுக்கு செலவு செய்கின்றவர்கள் தான் அவர்கள் தவிர இப்ப எந்த பணத்தையும் தருவதில்லை.
பீகார் வேறு தமிழ்நாடு வேறு. தமிழ்நாட்டில் வேறு எந்த இயக்கமும் காலூன்ற முடியாது. இது திராவிட இயக்கத்துடைய வரலாற்று சிறப்புமிக்க பூமி. ஆரம்ப காலத்தில் இருந்தே திராவிட இயக்கத்தை ஊட்டி ஊட்டி வளர்த்த பூமி. இங்க இருக்கக்கூடிய தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. ஆன்மீக அரசியலை சொல்லி எல்லாம் ஏமாற்ற முடியாது.
நாங்கள் ஆன்மீக அரசியலுக்கு எதிரிகள் அல்ல. தமிழ் உணர்வு உள்ள அத்தனை வாக்காளர் மக்களுக்கும் நன்றாக தெரியும். எங்களைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்று எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் எங்களுடைய கொள்கை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை.
எல்லோரும் சமம் என்பது தான் எங்களுடைய கொள்கை. எல்லோரும் சமம் என்று ஏற்றுக் கொண்டு அவர்கள் வந்தார்கள் என்றால் எங்களுக்கு எந்த ஆட்சியபனையும் கிடையாது. எல்லோரையும் சமமாக அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
எதிரி உதிரி எல்லாம் அவர்கள் தான்.
இளைஞர்கள் முதியவர்கள் என கட்சியில் உள்ள அனைவருக்கும் சம உரிமை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இளைஞர்களும் வரவேண்டும் அல்லவா. கட்சியை பலப்படுத்த இளைஞர் தேவைதான். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது இளைஞர் அணி செயலாளருக்கு உண்டு. அவரது உரிமையை அவர் கேட்கிறார்.
எஸ் ஐ ஆர் பணி முடிவடைந்துள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளிவந்த பிறகு தான் என்னென்ன நடந்திருக்கிறது என்பது தெரியவரும். விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
திமுக களப்பணியில் முதல் இடத்தில் இருக்கும். ஒரு வாக்காளர்கள் விடாமல் அதிமுகவை பாஜகவா திமுகவா என எதை பற்றியும் கவலைப்படாமல் அனைவரையும் வாக்காளர்களாக சேர்க்கின்ற கட்சி தான் திமுக. எங்க கட்சியின் மட்டும் நாங்கள் சேர்க்க மாட்டோம் அனைத்து கட்சியையும் சேர்ப்போம்.....
காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை உள்ளது யாரும் நிலத்தை கொடுக்க மறுக்கிறார்கள் விஜயபாஸ்கர் அவர்களிடம் பேசி நிலத்தை வாங்கிக் கொடுத்தால் திட்டம் தாமதம் இல்லாமல் நிறைவேற்றப்படும்.
விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மருத்துவமனைகளுக்கு எந்த விதமான கருவிகளும் வழங்காமல் இருந்தார் குறிப்பாக அவருடைய சொந்த ஊரான இலுப்பூர் மருத்துவமனிலேயே எந்த விதமான அடிப்படை வசதிகளும் உபகரணங்களும் இல்லாமல் இருந்தது அவர் அமைச்சராக இருந்தபோது மருத்துவமனைகளுக்கு பெயிண்ட் அடித்ததை தவிர எதையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்
Hindusthan Samachar / Durai.J