கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், இன்று (டிச 15) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், இன்று (டிச 15) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், வரும், 18ம் தேதி வரை, மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

குளிர் காற்று மற்றும் பனிமூட்டம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழக தென் மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b