முத்தரையர் தபால் தலை வெளியீடு - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்
தமிழ்நாடு, 15 டிசம்பர் (ஹி.ச.) டெல்லியில் மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலை வெளியிட்டதற்கு பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தான் கண்ட போர்களி
முத்தரையர்


தமிழ்நாடு, 15 டிசம்பர் (ஹி.ச.)

டெல்லியில் மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலை வெளியிட்டதற்கு பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தான் கண்ட போர்களில் எல்லாம்

வெற்றி வாகை சூடிய மாவீரர்,

முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்,

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பிலும், அதிமுக சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam