Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேல், 1950ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தன்னுடைய 75வது வயதில் காலமானார். அவரது நினைவு தினம் இன்று (டிசம்பர் 15) அனுஷ்டிக்கப்படுகிறது.
அவரை நினைவு கூரும் வகையில் பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 15) எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75ம் ஆண்டு நினைவு தினத்தில், அவருக்கு மரியாதை மிகுந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டை ஒருங்கிணைப்பதில் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
பிரிக்கப்படாத, வலிமைமிக்க பாரதத்தை உருவாக்கியதில் அவரது ஈடுஇணையற்ற பங்களிப்பை, இந்த தேசம் என்றென்றும் மறக்காது.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b