Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச)
தான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ துரோகமோ செய்யவில்லை. அன்புமணியின் செயல்பாடுகளால் தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார் என்று ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, 10.5 சதவீத ஒதுக்கீட்டை கெடுத்தது நான் தான் என்று மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுவதாக தெரிவித்தார்.
அன்புமணியை மத்திய அமைச்சராக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸிடம் பரிந்துரைத்ததே தான்தான் என்றும் தான் எப்படி அப்பா மகனை பிரிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
ராமதாஸும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும்.
வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் பேசியதால்தான் இத்தனை பிரச்சினை ஆரம்பித்தது என்று கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam