ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதால், மாணவர்கள் தேர்வு எழுதாமல் போராட்டம்
திண்டுக்கல், 15 டிசம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, செங்கட்டாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் செங்கட்டாம்பட்டி, சாலைப்புதூர், சுந்தர்ராஜபுரம், நல்லம்பிள்ளை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த சும்மா 125
School Students Protest


திண்டுக்கல், 15 டிசம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, செங்கட்டாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் செங்கட்டாம்பட்டி, சாலைப்புதூர், சுந்தர்ராஜபுரம், நல்லம்பிள்ளை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த சும்மா 125 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், 7 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டிவீரன்பட்டியை சேர்ந்த விஜயசுந்தர் என்பவர் தமிழ் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவர் இப்பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தமிழ் பாடம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், தமிழ் ஆசிரியர் விஜயசுந்தர் திடீரென வேறு ஒரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால், இன்று நடைபெறும் அரையாண்டு தேர்வு முதல் நாளான தமிழ் தேர்வு எழுதாமல், இப்பள்ளியில் படிக்கும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவ மாணவிகள் சுமார் 57 பேர் தமிழ் தேர்வு எழுதாமல் தேர்வை புறக்கணித்து பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன், வத்தலக்குண்டு வட்டார கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டம் காலை 10 மணி முதல் தற்போது வரை 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN