தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது - செல்வப் பெருந்தகை
புதுடெல்லி, 15 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் ஆலோசனை நடத்தினார். தொடர
செல்வப்பெருந்தகை


புதுடெல்லி, 15 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது,

தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தி வருகை பிரியங்கா காந்தி வருகை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம் என்று தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரை தொடர்பாகவும், தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும் ஆலோசித்ததாக தெரிவித்தார்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையுடன் இன்று தமிழ்நாடு நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்துவதாக இறந்ததாகவும் ஆனால் அது ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று தெரிவித்த அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு வங்கியை விட அதிக சதவிகிதம் வாக்கு பெற்று வெற்றி பெறுவோம் என்று உறுதியுடன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam