இன்று வாங்க வேண்டிய பங்குகள் - பரிந்துரை செய்யும் சாய்ஸ் புரோக்கிங்
சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.) அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து உலோகப் பங்குகளை வாங்குவதாலும், உலகளாவிய பாசிட்டிவான போக்குகளாலும் ஊக்கமடைந்த இந்திய பங்குச் சந்தை அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, டிசம்பர் 12 வ
இன்று வாங்க வேண்டிய பங்குகள் -  பரிந்துரை செய்யும் சாய்ஸ் புரோக்கிங்


சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து உலோகப் பங்குகளை வாங்குவதாலும், உலகளாவிய பாசிட்டிவான போக்குகளாலும் ஊக்கமடைந்த இந்திய பங்குச் சந்தை அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக ஏற்றத்தில் முடிவடைந்தன.

30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 449.53 புள்ளிகள் உயர்ந்து 85,267.66 என்ற நிலையில் நிலைபெற்றது. இந்த வாரத்திற்கான பங்குச் சந்தை எதிர்பார்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சாய்ஸ் புரோக்கிங்கின் நிர்வாக இயக்குனர் சுமீத் பகாடியா, இந்த உளவியல் நிலையைத் தாண்டிய பிறகு நிஃப்டி 50 குறியீடு 26,000 நிலைகளுக்கு மேல் நீடித்ததால் இந்திய பங்குச் சந்தை மனநிலை மேம்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 15ம் தேதி) திங்கட்கிழமை வாங்க வேண்டிய பங்குகளை பரிந்துரை செய்துள்ளார். அதாவது எடர்னல், மாருதி சுசுகி மற்றும் நெஸ்லே ஆகியவற்றை வாங்கலாம் என தெரிவித்துள்ளார்.

எடர்னல் நிறுவனத்தின் பங்கை ரூ.298 இல் வாங்கலாம். இதன் இலக்கு விலை ரூ.320 , ஸ்டாப் லாஸ் ரூ.287 என்ற தெரிவித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்கை ரூ. 16522 இல் வாங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் இலக்கு விலை ரூ.17500, ஸ்டாப் லாஸ் ரூ.16050 என கூறப்பட்டுள்ளது.

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் பங்கை ரூ.1,238 க்கு வாங்கலாம். இதன் இலக்கு விலை: ரூ.1330 , ஸ்டாப்லாஸ் ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM