Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)
இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை அவர்களின் வாழ்நாள் கடமைகளில் முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் சென்னை வருகின்றனர்.
அவர்கள் பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு வசதியாக விமான நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றிற்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டடம் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (16.12.2025) காலை 10 மணி அளவில் அடிக்கல் நாட்டுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டு கொள்கிறார்கள்.
Hindusthan Samachar / vidya.b