Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, கோயமுத்தூர், மதுரை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரே மாதிரியாக இந்த விடுமுறை பொருந்தும்.
இந்த அரசு விடுமுறைகள், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், தேசிய, கூட்டுறவு வங்கிகள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், பல்வேறு துறைகள், பொதுத் துறை அலுவலகங்கள் என அனைத்துக்கும் பொருந்தும்.
இந்த விடுமுறைகளுடன் 2ஆவது, 4ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் மூடப்பட்டிருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டு தமிழக அரசு விடுமுறை பட்டியலில் மொத்தம் 24 அரசு விடுமுறைகள் இடம்பெற்றுள்ளன.
இதில் தேசிய விடுமுறைகள், மத, பண்பாட்டு பண்டிகை, சமூகத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு தினங்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளும் அடங்கும்.
விடுமுறை நாட்கள் விபரம் பின்வருமாறு:
ஜனவரி 1 - புத்தாண்டு ஜனவரி 15 - பொங்கல் ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம் ஜனவரி 17 - உழவர் திருநாள் ஜனவரி 26 - குடியரசு தினம் பிப்ரவரி 1 - தைப்பூசம் மார்ச் 19 - தெலுங்கு புத்தாண்டு மார்ச் 21 - ரம்ஜான் ஈத் மார்ச் 31 - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 1 - ஆண்டு கணக்கு முடிப்பு நாள் ஏப்ரல் 3 - குட் ஃபிரைடே ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் மே 1 - மே தினம் மே 28 - பக்ரீத் ஜூன் 26 - முஹர்ரம் ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம் ஆகஸ்ட் 26 - மிலாத் உன் நபி
செப்டம்பர் 4 - கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 14 - விநாயகர் சதுர்த்தி அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி அக்டோபர் 19 - ஆயுத பூஜை அக்டோபர் 20 - விஜயதசமி நவம்பர் 8 - தீபாவளி டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்.
மேலே கொடுக்கப்பட்டவை அரசு அலுவலகங்களுக்கானதுதான். கல்வித் துறை விரைவில் பள்ளிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவிக்கும் என தெரிகிறது.
Hindusthan Samachar / vidya.b