Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன், சிறப்புப் பொது விநியோக திட்டத்தில் ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம் பருப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பொருட்கள், தனியாரிடம் இருந்து ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
சிறப்புப் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான பருப்பு மற்றும் பாமாயில், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000படி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்கள், 60,000 டன் துவரம் பருப்பு, 60,000 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயிலை எந்தவித தங்கு தடையுமின்றி விநியோகம் செய்யும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b