Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 15 டிசம்பர் (ஹி.ச.)
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைய வேண்டும் என்பது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் விருப்பம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் இருப்பதாகவும், பிப்ரவரி 23ஆம் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
அரசியல் நிலவரத்தில் நான்குமுனை போட்டி நடைபெறுவதாகவும், அதில் அமமுக இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் தங்களுடன் பேசி வருவதாகவும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பத்தை முன்வைத்து கூட்டணி தொடர்பான முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அம்மாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இணைய வேண்டும் என்று தான் கூறினேன்.
ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று கூறவில்லை. ஒரே அணியில் இணைந்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் இணைகிறார் என்றால் அறிவிப்பு வந்தவுடன் பார்க்கலாம் என்று பதில் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam