Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச)
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி நாளை முதல் தலைமைச் செயலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள் இந்நிலையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்,
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் மாநிலத் தலைவர் பெரியசாமி பேசுகையில்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம், தற்போது அமைச்சர் முத்துசாமி அவர்கள் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அழைத்திருந்தார்,
அமைச்சர் டாஸ்மாக் ஊழியர்கள் உயர் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார், நாளை எங்களுக்கு ஒரு நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்,
நாளை மீண்டும் 11 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்கள், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து போராட்டம் கைவிடப்படுமா அல்லது தொடருமா என்பது குறித்து தெரிவிப்போம் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ