இனி ரயிலில் இரவு 10 மணிக்கு மேல் ரீல்ஸ் பார்த்தால் அபராதம்!
தமிழ்நாடு, 15 டிசம்பர் (ஹி.ச.) ரயில் பயணத்தை வசதியாக மாற்றுவதற்காக இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கு இரவு 10 மணிக்குப் பிறகு புதிய விதிகளை ரயில்வே அமல்படுத்தியுள்ளது. தொலைதூர பயணங்களுக்குச் செல்லும்போது இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் அதிக சத்தமாக ர
ரயில்


தமிழ்நாடு, 15 டிசம்பர் (ஹி.ச.)

ரயில் பயணத்தை வசதியாக மாற்றுவதற்காக இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கு இரவு 10 மணிக்குப் பிறகு புதிய விதிகளை ரயில்வே அமல்படுத்தியுள்ளது.

தொலைதூர பயணங்களுக்குச் செல்லும்போது இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் அதிக சத்தமாக ரீல்ஸ் பார்ப்பதற்குத் தடை விதித்துள்ளது.

சக பயணிகளுக்குத் தொல்லை தரும் வகையில் சத்தமாக ரீல்ஸ் பார்த்தாலோ, தொலைபேசியில் பேசினாலோ ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் பயணிகள் செய்யக் கூடாது.

இந்த விதியின் முக்கிய நோக்கம், பயணத்தின் போது ஒவ்வொரு பயணிக்கும் தூக்கம் மற்றும் ஓய்வுக்கான முழுமையான வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதாகும். மேலும், இரவு விளக்கைத் தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு பயணியும் ரயில்களில் அதிக சத்தத்தில் பாடல்களைக் கேட்கவோ அல்லது மொபைல் போன்களில் சத்தமாகப் பேசவோ கூடாது. உங்கள் செயல்கள் சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால் அல்லது அவர்களுக்கு இடையூறு விளைவித்தால், அது விதிகளை மீறுவதாகக் கருதப்படும். இதனால், சம்பந்தப்பட்ட பயணி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு ரயில்வே சட்டம், 1989 இன் பிரிவு 145 இன் படி, ரூ.500 முதல் ரூ.1,000 வரை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு பிறகு ரயில்களில் உணவு விநயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் அதற்கு முன்பே உணவுகளை ஆர்டர் செய்து கொள்ள வேண்டும். இந்த விதிகள் ஸ்லீப்பர், ஏசி ஸ்லீப்பர், சாதாரண பெட்டிகளுக்கும் பொருந்தும் என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam