ஈரோட்டில் த வெ க பரப்புரைக்கூட்டத்திற்கு அனுமதி - விஜய்க்கு இந்து சமய அற நிலையத்துறை நிபந்தனைகள்!
தமிழ்நாடு, 15 டிசம்பர் (ஹி.ச.) வருகின்ற 18-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடைபெற உள்ள விஜயின் பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிபந்தனைகளும் விதித்து இந்து சமய அறநிலையத்துறை இடத்தை வழங்கியுள்ளது. சர்வீஸ்
விஜய்


தமிழ்நாடு, 15 டிசம்பர் (ஹி.ச.)

வருகின்ற 18-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடைபெற உள்ள விஜயின் பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிபந்தனைகளும் விதித்து இந்து சமய அறநிலையத்துறை இடத்தை வழங்கியுள்ளது.

சர்வீஸ் ரோட்டில் இருந்து வடபுரம் சுமார் 250 அடி தூரம் இடைவெளி விட்டு நிகழ்ச்சிக்கான தடுப்புகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் பகல் ஒரு மணி வரை பொதுக்கூட்டம் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தவெக பரப்புரைக் கூட்டத்திற்கு வரக்கூடியவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு முறையாக வழங்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சொந்த செலவில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

ஒலிபெருக்கி, மேடை அமைக்க மற்றும் பயன்படுத்த காவல் துறை அனுமதி பெற வேண்டும்.

நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.

இடத்திற்கு உரிமை கொண்டாடக்கூடாது மற்றும் இடம் எப்படி கொடுக்கப்பட்டதோ, அதே நிலையில் இடத்தை இந்து சமய அறநிலையத் துறையினரிடம் மீண்டும் வழங்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam