Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (15.12.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, வி.க.நகர் மண்டலம், வார்டு-78, நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் 78ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் 750 சதுர அடி பரப்பளவில் பல்நோக்கு மையக் கட்டிடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது, மேயர் ஆர்.பிரியா மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமன குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுமதி, புனிதவதி எத்தி ராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b