Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 15 டிசம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 57 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிட வருவோருக்கு இந்தியராக இருந்தால் 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை செய்து கவனித்து வருகிறது.
குறிப்பாக இங்குள்ள பல்லவர் கால கற்சிற்பங்களை ரசிக்க, அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வருவோர், இங்கிருந்து சென்னை செல்வோர், நகராட்சியின் முதல் வார்டு பகுதியான, தேவனேரியைக் கடந்தே செல்கின்றனர்.
இப்பகுதியில் கடக்கும் கிழக்கு கடற்கரை சாலையில், உட்புற சாலை வடக்கிலும், தெற்கிலும் இணையும் சந்திப்புகள் உள்ளன.
நகராட்சிப் பகுதியின் வடக்குப்புற நுழைவாயிலாக உள்ள இச்சந்திப்புகளை அழகுபடுத்த, நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது. இதையடுத்து தற்போது, சாலையோரத்தில் பூங்கா அமைத்து, பூச்செடிகள் நடப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b