Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிகபடியா இடங்களில் வென்றது. இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கம்யூனிசம் எனும் நோய்க்கிருமி முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்களே ஆணவத்தில் ஆடாதீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் எல்.டி.எஃப் (LDF) பெற்றிருக்கும் வாக்குகள் 1,67,801. என்.டி.ஏ (NDA) பெற்றிருக்கும் வாக்குகள் 1,65,055. இதைக் கொண்டாடுவது உங்கள் விருப்பம்.
அதற்காக, 'இந்தியாவில் கம்யூனிசம் என்னும் நோய்க்கிருமி முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது' என்று கூறியிருப்பது மூடத்தனத்தின் உச்சம்.
கம்யூனிசம் என்பது சமூக அறிவியல். அதை யாராலும் ஒழிக்க முடியாது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் என்னும் விஷக்கிருமியை ஒழித்தே தீருவோம்.
ஏனென்றால், அது மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய போற்றுதலுக்குரிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ