2021 தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் தோல்வியை சந்தித்த அதிமுக சி.வி.சண்முகம் இந்தமுறை தொகுதி மாறுகிறார்!
சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச) அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் தனது சொந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனு - கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் தோல்வியை சந்தித்த நிலையில் தொகுதி மாறுகிறார் அதிமுக சார்பில் நேற்று விருப்ப மனு தொடங்கியது.
Cvs


சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச)

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் தனது சொந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனு - கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் தோல்வியை சந்தித்த நிலையில் தொகுதி மாறுகிறார்

அதிமுக சார்பில் நேற்று விருப்ப மனு தொடங்கியது. இதில் அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்கள் போட்டியிட விருப்பமனுவை வழங்கி வருகின்றனர்

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார்

கடந்த 2001,2006 தேர்தலில் திண்டிவனத்திலும், 2011,2016ல் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்

2021 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்

திமுக வேட்பாளர் லட்சுமணன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி கடினமாக இருக்கும் என்பதால் தொகுதி மாற முடிவு செய்துள்ளார்.

தனது சொந்த தொகுதியான மயிலம் தொகுதியில் போட்டியிட சி வி சண்முகம் விருப்பமனுவை வழங்கியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ