Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை சூளை பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி விழாவில் உரையாற்றினார்.
சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
முதல்வர் அவர்களின் உத்தரவிற்கு இனங்க கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு சென்னை திருவள்ளுவர் கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு கொடுக்கவுள்ளோம்.
திறமையான வீரர் வீராங்கனைகளை உருவாக்குவதே முதல்வர் நோக்கம் அரசின் நோக்கம்.
கிராமபுறங்களுக்கு கொடுக்கப்படுவது போல் நகர்புறங்கங்களுக்கும் கொடுக்கப்படவுள்ளது.
3100 உபகரணங்கள் தொகுப்பு இன்று கொடுக்கப்படவுள்ளது.
நகர்புறங்களில் தெருக்கள் தான் மைதானம் அதிகம் பேர் தெரு கிரிக்கெட் விளையாடுவார்கள்.
ஏராளமான போட்டிகளை சென்னையில் நடத்துகிறோம் முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு பலகோடி பரிசுத்தொகை கொடுக்கிறோம்.
ஜீனியர் உலகக்கோப்பை ஹாக்கி , ஸ்குவாஷ் போட்டி நடைப்பெற்றுள்ளது இப்போது.
வெளிநாடுகளுக்கு சென்று தயக்கமின்றி விளையாட அவர்கள் அங்கு சென்று கலந்துக்கொள்ள உதவித்தொகை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அகாடமி செய்கிறது. திறமையாக விளையாடினால் 3% இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சட்டமன்ற தொகுதிகளில் மைதானங்கள் அமைக்க்கப்படுகிறது.
விளையாட்டு பிரிவில்6 விருதுகள் கிடைத்துள்ளது .
இன்று விளையாட்டு உபகரணங்கள் வாங்கும் நீங்களும் பெரியளவில் சாதிக்கவேண்டும்.
தங்கை கீர்த்தனாவிற்கு உயரிய ஊக்கத்தொகை ஒரு கோடி அளிக்கப்பட்டுள்ளது எளிய குடும்பத்திலிருந்து வந்து திறமையால் வென்றுள்ளார்கள்.
அதே போல் கூடைப்பந்து வீராங்கனை ஸ்ருதி அரசு வேலையில் உள்ளார் இவர்களை போல் நீங்கள் வரவேண்டும் உங்களுக்காக முதல்வர் அவர்களும் நானும் உள்ளோம்.
அலைபேசி திரை பார்ப்பதை குறைத்து பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்..
விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்துங்கள் பேணுங்கள் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ